ஆண்கள் என்பதால்
ஆணவம் கொள்வதும் ஏன்?
பெண்கள் என்பதால்
அடிமைப்படுத்துவதும் ஏன்?
அடிமை விலங்கைத்
...தகர்த்திடல் வேண்டும்
அற்புதச் சிறகை
விரித்திடல் வேண்டும்
ஆணுக்குள்ள சுதந்திரம்
பெண்ணுக்கும் வேண்டும்
அர்த்தமற்ற சுதந்திரம்
யாருக்கு வேண்டும்
புதியதோர் உலகம்
செய்திடல் வேண்டும்
புதுமைப் பெண்கள்
அதனை ஆள வேண்டும்
சொர்கத்தின் நடை பாதையிலே
ஆடித்திரிந்த பள்ளி தோழிகள் நாம்
வாழ்க்கை எனும் எதிர்காலம் தேடி
பாதைமாறி போகின்றோம் ,
மீண்டும் அந்த சொர்கவாசல்
எம்மை வரவேற்குமா??? என்ற
ஏக்கத்துடன்.............................
ஓடி வரும் அலைகளையும்
தாங்கிகொள்ள கரைகள் உண்டு
மேகம் சிந்தும் கண்ணீரையும்
ஏந்தி கொள்ள பூமி உண்டு
இரவின் தனிமையதையும்
தாலாட்ட நிலவு உண்டு
நாடிவரும் பறவைகளுக்கும்
அடைக்கலமீய தருக்கள் உண்டு
ஆனால் ............
பிரிவின் தருவாயில்
நட்பின் கண்ணீர் துடைக்க எது உண்டு ??????????
அரிதாக சில நட்பு ஆரம்பத்தில் கிடைத்தது,
அன்பையும் அனுபவங்களையும் அள்ளித்தந்தது.......
என்னை மட்டுமல்ல,
நல் நட்பையும் உணரவைத்தது.
அந்நட்பின் பிரிவை உணர்கையில்
நனைகிறது......
என் இதயம் கண்ணீரில்.....
என் தோழிக்கு
உன் உடன் பிறந்தவன் நானல்ல
உன் உறவினன் நானல்ல
உன் காதலன் நானல்ல
உன் என்று கூட பிரிக்க மனமில்லா
...உன் தோழன் நானடி
தயக்கம் ஏனடி
என் தோளில் சாய்ந்து கொள்ளடி
நட்பின் இலக்கணத்தை மாற்றும் காலமிது
நட்பிற்கு விலை கேட்கும் மனிதர்கள்
நண்பா கவனமாயிரு
நட்பை விற்று விடாதே
கோடி வருடமானாலும் உன்னால்
...மீளப்பெற முடியாது .
என் கையில் ஒரு காகிதம் கவிதையாய் பூத்திருக்கின்றது..
உன் நட்பின் கைகள் வந்து பறிப்பதற்காய்...
ஒரு நட்பின் புன்னகைக்கு
உதடுகள் ... தேவையில்லை
இதயம் போதுமே
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது ! சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விட வும்
முடியாது ! சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல
நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர்............
வாழ்ந்தால் உன் இதயத்தில் வாழ வேண்டும்.... இருந்தால் ...உன் விழிக்கு இமையாக இருக்க வேண்டும்... இறந்தால் உன்னை நினைத்து இறக்க வேண்டும்...